முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிற்கு உலகளாவிய முதலீட்டாளர்களை அழைத்தோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Stalin--

Source: provided

சென்னை : நிலையான உறுதியுடன் நம் கனவுகளை துரத்துவோம் என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு, உலகளாவிய முதலீட்டாளர்களை அழைத்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து அவர் கடந்த 27-ந்தேதி இரவில் புறப்பட்டு துபாய் சென்றார். அங்கிருந்து அமெரிக்காவிற்கு பயணித்து நேற்று சான்பிரான்சிஸ்கோ சென்றார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒரே நாளில் ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது சென்னை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 4,100 வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- "ஒரு உற்சாகமான மாலைப் பொழுதில், முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆற்றல்மிக்க விவாதங்களை நடத்தினோம். எல்லையில்லா ஆற்றல் மற்றும் பரந்த வாய்ப்புகளின் நிலமான தமிழ்நாட்டிற்கு, உலகளாவிய முதலீட்டாளர்களை அழைத்தோம். நிலையான உறுதியுடன் நம் கனவுகளைத் துரத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து