முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பி.எம்.ஸ்ரீ. திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024      இந்தியா
Dharmendra Pradhan 2023 06 21

Source: provided

புதுடில்லி : தமிழக அரசு உறுதி அளித்தபடி பிஎம்ஸ்ரீதிட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம்.

குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களை சென்றடைய வேண்டும். தமிழக அரசு உறுதி அளித்தபடி பிஎம்ஸ்ரீதிட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது. தமிழ் மொழியை மாணவர்கள் கற்க ஏதுவாக கடந்த ஜூலையில் தமிழ் சேனல் ஒன்று துவங்கப்பட்டது. இவ்வாறு அந்த கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

முன்னதாக 2024-25 நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டதில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை விடுவிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து