முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 - பாரீஸ் பாராலிம்பிக்: 10 மீ. ஏர் ரைபிள் போட்டியில் அவனி லெகராவுக்கு தங்கம் - மோனா அகர்வாலுவுக்கு வெண்கலம்

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Avani-Legara-Mona-Aggarwal

Source: provided

பாரீஸ் : பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். மூன்றாவது இடத்தைப் பிடித்த மோனா அகர்வாலுவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. நேற்று ஒரேநாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது.

அவனி லெகராவுக்கு...

பாரீஸ் பாராலிம்பிக்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான அவனி லெகரா, தகுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

மோனா அகர்வால்... 

இறுதிச்சுற்றில் 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்தியா சார்பில் அவனி லெகரா, மோனா அகர்வால் கலந்து கொண்டனர். இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா 249.7 புள்ளிகளுடன் முதலிடமும், தென் கொரியாவின் லீ யுன்ரி 246.8 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பிடித்தனர்.

ஓட்டப்பந்தயம்...

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக் ஓட்டப்பந்தய வரலாற்றில் இந்தியா சார்பில் பெறப்படும் முதல் பதக்கம் இது. பாரா ஒலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நர்வால்வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் நேற்று ஒரேநாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்ளிட்ட நான்கு பதங்கள் கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து