முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Modi 2023 07 30

Source: provided

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இன்று நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் தங்கம் , வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

இந்த நிலையில் அவனி லேகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். மேலும் பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவனி லேகராவின் அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது.என தெரிவித்துள்ளார். வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். மோனா அகர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது. என தெரிவித்துள்ளார்.  

____________________________________________________________________________

கபில்தேவ் சாதனை சமன் 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை தரப்பில் அசிதா பெர்ணாண்டோ, மிலன் ரத்னாயகே மற்றும் லஹிரு குமரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய அட்கின்சன் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் மேத்யூ போட்ஸ் 21 ரன்னில் அவுட் ஆனார்.  இந்த ஆட்டத்தில் சதம் அடித்த அட்கின்சன் கபில் தேவின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் கபில் தேவின் (4 சிக்சர்) சாதனையை கஸ் அட்கின்சன் (4 சிக்சர்) சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (9 சிக்ஸ்) உள்ளார். 

____________________________________________________________________________

முதல் நாள் ஆட்டம் ரத்து

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அதே ராவல்பிண்டியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க இருந்தது. னால் ராவல்பிண்டியில் கனமழை பெய்வதன் காரணமாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

____________________________________________________________________________

ரஷித் கான் திடீர் ஓய்வு..?

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் சிறிது காலம் ஓய்வு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக ரஷித் கான் வலம் வருகிறார். அவர் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கானின் பெயர் இடம்பெறவில்லை. முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் ரஷித் கான் அடுத்த ஓராண்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: ரஷித் கானுக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அவரது வேலைப் பளுவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துவதே எங்களது திட்டம். அடுத்த 6 மாதம் அல்லது ஓராண்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் விளையாடப் போவதில்லை என்பதும் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டியிருக்கும். முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக பந்துவீசுவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் ரஷித் கான் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து