முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் வரும் 6-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு பயணத்தை தொடங்கும்: நாசா

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      உலகம்
NASA 2024-08-25

நியூயார்க், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இன்றி ஸ்டார் லைனர் விண்கலம்  வரும் 6-ம்  தேதி மாலை 6.04  மணிக்கு பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கும் என்று நாசா அறிவித்துள்ளது.  

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.  

இதன் காரணமாக கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது அவர்கள் இன்றி வரும் 6-ம்  தேதி மாலை 6.04  மணிக்குப் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கும் என்று நாசா அறிவித்துள்ளது.  

மேலும் ஸ்டார் லைனர் விண்கலம் என்று சுமார் 6 மணி நேரம் பயணித்து  மறுநாள் 12.03 மணிக்கு பூமியை அடையும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. பூமிக்குத் திரும்ப உள்ள  ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே ஏன் அவர்கள் இருவரையும் அழைத்து வரவில்லை என்று நாசா விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. 

அதாவது, இது போன்ற பயணத்தின் போது விண்கலம் வெடித்து உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர்  கல்பனா சாவ்லாவின்  மரணமே தற்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பழுதுபட்ட விண்கலத்தில் அழைத்து வர வேண்டாம் என்ற முடிவை நாசா எடுக்க காரணமாக அமைத்துள்ளது.   

இதனாலேயே இன்னும்  8 மாதங்கள்  கழித்து அடுத்த வருடம் பிப்ரவரியில் இருவரையும்  பூமிக்கு அழைத்து வரும் முடிவுக்கு நாசாவை தள்ளியுள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்துள்ளோம் என்ற நாசாவை சேர்ந்த பில் நெல்சனின் கூற்று இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. . 

கடந்த 2003-ம் ஆண்டு நாசா சார்பில் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து