முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான ஜூன் மாதத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Anpil-Mahes 2024-08-31

Source: provided

நெல்லை : அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான ஜூன் மாத நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று அமைச்சர்  அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட  கூட்டப்புளி கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க ரூ. 48.50 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கினார்.   இதற்கான பணிகள் தொடக்க விழா கூட்டப்புளி கிராமத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது, 

பள்ளிக்கல்வித் துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் 230 கோடி ரூபாயை குறைத்து விட்டார்கள். 2120 கோடி ரூபாய் நாம் கேட்டிருந்த நிலையில் 1876 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டிற்கு 2300 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய 540 கோடி ரூபாய் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. 

பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டத்தின் மூலம் 14,500 புதிய பள்ளிகள் கொண்டு வர உள்ளனர். அதில் மறைமுகமான தீர்மானங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியாது. எனவே அதனை ஏற்கவில்லை.  தமிழக அரசின் கல்வித் துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும். 

பிரதம மந்திரி மாதிரி பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவார்கள். ஆகவே பிரதம மந்திரி மாதிரி பள்ளி நிதியை நாம் கேட்கவில்லை. அனைவருக்கும் கல்வி தொடர்பான நமக்கு தர வேண்டிய நிதியை தான் கேட்கிறோம்.

நாடாளுமன்றத்தில் ஒரு திட்டத்திற்காக நிதியை ஒதுக்கி விட்டால் அதன் பிறகு அதனை வழங்க நிபந்தனைகளை விதிப்பது சரியானது அல்ல, அது ஏற்புடையது அல்ல. மேலும் தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து