முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 3,4-ம் தேதிகளில் புரூனே, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      இந்தியா
Modi 2023-08-21

Source: provided

புதுடெல்லி : வரும் 3,4-ம் தேதிகளில் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார். 

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 40-வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி அரசு முறை பயணமாக புரூனே செல்கிறார். வருகிற 3 மற்றும் 4-ம் தேதிகளில் புரூனேயில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

புரூனே பயணத்தை முடித்து விட்டு 4-ம் தேதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கும் செல்கிறார். 5-ம் தேதி வரை சிங்கப்பூரில் இருக்கும் பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பல்வேறு துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து