முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதார்நாத் அருகே பழுது பார்க்க கயிறு கட்டி தூக்கி செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      இந்தியா
Helicopter 2024-08-31

Source: provided

டேராடூன் : கேதார்நாத் அருகே பழுது பார்க்க கயிறு கட்டி தூக்கி செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே மலைப் பகுதியில் உள்ள இறங்குதளத்தில் கடந்த மே மாதம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

அந்த ஹெலிகாப்டரை பழுது பார்ப்பதற்காக கச்சார் விமான தளத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதையடுத்து, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் மூலம், பழுதடைந்த அந்த ஹெலிகாப்டர் கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்டது.

இந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. அப்போது ஹெலிகாப்டரை தூக்கிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறு நடுவானில் திடீரென அறுந்தது. 

இதனால் பழுதடைந்த ஹெலிகாப்டர் மந்தாகினி நதி அருகே உள்ள லின்சோலி என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த ஹெலிகாப்டரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள்  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

இது தொடர்பாக கேதார்நாத் மாவட்ட சுற்றுலா அதிகாரி கூறுகையில், எம்ஐ-17 விமானம் மூலம் ஹெலிகாப்டரை கௌச்சர் விமான ஓடுதளத்துக்கு  கொண்டு செல்ல திட்டமிட்டு, சிறிது தூரம் சென்றவுடன் எம்ஐ-17 பேலன்ஸ் இழக்கத் தொடங்கியது. 

ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்றின் காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கு காயமில்லை. எனவே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து