முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு மேலும் இரண்டு வந்தே பாரத் ரெயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      இந்தியா
Vande-Bharat-Start-up 2023-05-25

Source: provided

புதுடெல்லி : தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் மற்றும் பெங்களூரு - மதுரை வந்தே பாரத் ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் ரெயில்கள் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வந்தே பாரத் ரெயில்களின் சேவை உதவும். வந்தே பாரத் ரெயில் சேவையால் தொழில்கள் வளரும். வேலைவாய்ப்புகள் பெருகும். 

தமிழகத்தின் கோவில் நகரையும், கர்நாடகாவில் ஐ.டி.நகரையும் வந்தே பாரத் ரெயில் இணைக்கும். வந்தே பாரத் ரெயில்கள் மூலம் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். வந்தே பாரத் ரெயில்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து