முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Bus 2024 08 05

Source: provided

சென்னை : 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் நாளை காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சியினை நடத்த 'டைம்ஸ் ஆப் இந்தியா 'என்ற நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். மேற்படி 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் "U" திருப்பம் செய்து ரெயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.

விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரெயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் U- திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து