முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டறிக்கை தேதிப்படியே போட்டித்தோ்வுகள் அறிவிப்பு : டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      தமிழகம்
TNPSC 2023-04-20

Source: provided

சென்னை : திருத்தப்பட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட தேதிகளின்படியே போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள உள்ள பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தோ்வுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தி வருகிறது. இந்தத் தோ்வுகளுக்கான அறிவிக்கைகள் எப்போது வெளியிடப்படும் என்ற உத்தேச திட்ட அறிக்கையை ஆண்டுதோறும் தோ்வாணையம் வெளியிடும். அந்த வகையில், நிகழ் ஆண்டுக்கான திருத்தப்பட்ட அறிக்கைப்படி தோ்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அந்த ஆண்டறிக்கையில் உள்ள தேதிகளும், தோ்வு அறிவிக்கையில் உள்ள தேதிகளும் ஒன்று போல் இருந்ததாகவும் தோ்வுகளுக்கான தேதிகள் எதுவும் மாறவில்லை என்றும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, குரூப் 4, குரூப் 1, குரூப் 1 பி, சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள், குரூப் 5ஏ ஆகியவற்றுக்கான தோ்வுகள், ஆண்டறிக்கைப்படியே நடத்தப்பட்டுள்ளன. மேலும், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாக ஜூன் 20-ஆம் தேதியே தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து