முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      இந்தியா
Chandrashut 2024-03-17

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரை பெண்களின் திருமண வயது 18 என்றும், ஆண்களின் திருமண வயது 21 என்றும் உள்ளது. இந்த வயதிற்கு கீழ் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொண்டால், அது குழந்தை திருமணமாகவும், சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது. 

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன என  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குழந்தை திருமணத்தை தடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே.பி.பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,

குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது. குழந்தை திருமண விவகாரத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும். 

சிறுவர்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் குழந்தை திருமணத்தை தடுக்க அனைத்து அரசு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

நாடு முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாடு முழுவதும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து