முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் 110 கோடி மக்கள் பசி, பட்டினியுடன் அவதி : இந்தியாவில் 23.4 கோடி பேர் என ஐ.நா. தகவல்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      உலகம்
INDIA 2024-10-13

Source: provided

நியூயார்க் :  வறுமையால் பாதிக்கப்பட்டோர் இந்தியாவில் தான் அதிகம் பேர் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டில் உலகளாவிய வறுமை குறியீடு குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை  வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 

உலகில் 110 கோடி மக்கள் மிகவும் மோசமான வறுமையில் பசி, பட்டினியுடன் வாழ்கின்றனர். அதில் அதிகம் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மட்டும் 23.4 கோடி பேர் உள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தானில் 9.3 கோடி எத்தியோப்பியாவில் 8.6 கோடி மக்களும் நைஜீரியாவில் 7.4 கோடி மக்களும் காங்கோவில் 6.6 கோடி பேரும் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் உலகளவில் பசி பட்டினியால் வாடும் 110 கோடி மக்களில் 48 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 58.4 கோடி பேர் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்றும் உலகின் மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் 28 சதவீதம்  என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. 

குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 40 கோடி மக்களும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 75 கோடி மக்களும் வறுமையில் உள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதே போல் 2-ம் உலக போருக்கு பிறகு கடந்த 2023-ம் ஆண்டில் தான் பல்வேறு நாடுகளில் அதிக அளவு மோதல்கள் நடைபெற்றதாகவும் இதன் காரணமாக 12 கோடி மக்கள் புலம்பெயர்ந்த நிகழ்வும் நடந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து