முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை வெளியீடு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

திருமலை, திருப்பதி ஏழுமலையானை  ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை 19-ம் தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை 19-ம் தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இந்தச் சேவை டிக்கெட்டுகளை எலக்ட்ரானிக் டிப் செய்வதற்கான ஆன்லைன் பதிவு 21-ம் தேதி காலை 10 மணி வரை செய்யலாம். 

இந்த டிக்கெட்டுகளை பெறுபவர்கள் 21-ம் தேதியில் இருந்து 23-ம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் லக்கி டிப்பில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும். வரும் 22-ம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

உற்சவ சேவைகளுக்கான ஒதுக்கீடு, அவற்றின் தரிசன ஸ்லாட்டுகள் 22-ம் தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ம் தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். 

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23-ம் தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய் வாய்ப்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ம் தேதி மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகின்றன.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் (ரூ. 300) ஒதுக்கீடு 24-ம் தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன. திருமலை, திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான அறைகள் ஒதுக்கீடு 24-ம் தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து