முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுனரில்லா தானியங்கி மெட்ரோ ரெயில்: 26-ம் தேதி சோதனை ஓட்டம்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      தமிழகம்
Metro-Rail-2024-10-24

சென்னை, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டம் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில், மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும் (45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பனிமனை வரையிலும் (26.1 கி.மீ), மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் (44.6 கி.மீ) என சுமார் 116.1 கி.மீ தொலைவிற்கு 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரெயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 1,215.92 கோடிமதிப்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. அதன் பிறகு முதல் ரெயிலினை கடந்த செப்டம்பர் 22-ம் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. 

இந்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 3 பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டம் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து