முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையின் புதிய பிரதமரை அதிபர் நாளை நியமிப்பார் : தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      உலகம்
Sri-Lanka 2024-11-16

Source: provided

கொழும்பு : இலங்கையின் புதிய பிரதமரை அதிபர் அனுர குமார திசாநாயக்க நாளை திங்கள்கிழமை நியமிப்பார் என்று அவரது தேசிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.

இலங்கை பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) கட்சி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதை அடுத்து, பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. 

இதில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா, புதிய அமைச்சரவையை நாங்கள் திங்கட்கிழமை (நவ.18) நியமிக்கவுள்ளோம். இந்த அமைச்சரவை அதிகபட்சம் 25 பேரை மட்டுமே கொண்டதாக இருக்கும். இன்னும் குறைவாக 23 அல்லது 24 ஆகவும் இருக்கலாம். 

அமைச்சர்களுக்கான துறைகள் விஞ்ஞான ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படும். அதே நேரத்தில், துணை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். முக்கிய அமைச்சகங்களுக்கு கூடுதல் துணை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து