முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      தமிழகம்
OPS 2024-11-11

Source: provided

சென்னை : டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெட்ரோல், டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4-ம் குறைக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இதுபோன்ற வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாததோடு, நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகளையும் அரைகுறையாக, சம்பிரதாயத்திற்காக நிறைவேற்றி உள்ளது. 

உதாரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் லிட்டருக்கு 3 ரூபாய்தான் குறைத்தது. டீசல் விலையை குறைக்கவேயில்லை. அதே சமயத்தில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது.

இந்தச் சூழ்நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்றத் திட்டங்களால் ஏற்படும் செலவை ஈடுகட்ட டீசலுக்கு, மத்திய அரசின் பாணியில் கூடுதல் வரி விதிப்பது குறித்து தமிழக அரசின் நிதித் துறை அதிகாரிகள் வணிக வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கெனவே, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு என மாநில அரசின் பல வரி உயர்வுகளால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், டீசல் மீதான கூடுதல் வரி என்பது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகுக்கும். 

எனவே முதல்வர்  இதில் தனிக் கவனம் செலுத்தி, டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென்று  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து