முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 48 ஏழை ஜோடிகளுக்கு மணவிழா

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

Source: provided

சென்னை : சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று   48 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி துணை முதல்வர் வாழ்த்து கூறுகிறார்.

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வடசென்னை சுங்கச்சாவடியில் உள்ள தங்கம் மாளிகையில் நடைபெறுகிறது.

48 ஜோடிகளின் மண விழாவை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைக்கிறார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்து கூறுகிறார். திருமண விழாவில் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். 

பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெயதாஸ் பாண்டியன், சுரேஷ், செந்தில் குமார், ஜெயராமன், முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். அமைச்சர்கள் பொன்முடி, பி.கே. சேகர்பாபு, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.எல்.ஏ.க்கள், ஜே.ஜே. எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

விழாவில் நிர்வாகிகள் இளைய அருணா, மனோகரன், இரா.கருணாநிதி, மதிவாணன், மருதுகணேசன், நரேந்திரன், வெற்றி வீரன், எஸ்.ஆர்.கமலக்கண்ணன், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் வட்ட செயலாளர் என்.எம். கதிரேசன் நன்றி கூறுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து