முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்: புதுச்சேரியில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      இந்தியா
petrol-bbulk 2023-08-10

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து ஆட்டோ சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி அரசு உயர்த்தி அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஆட்டோக்களுக்கு, மலர் வளையம் வைத்து ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலர் சேது செல்வம், தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது:- 

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. அரசு பெட்ரோல் டீசல் விலையை தலா ரூ. 2 உயர்த்தி இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். இவ்விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.  புதுச்சேரி மாநிலத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டு வருகிறார்கள், இதனை தடுப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வருமான இழப்பை சந்தித்து வருகிறார்கள், அதுமட்டுமின்றி இன்சூரன்ஸ் கட்டணம், சாலை வரி, எப்.சி. கட்டணம் செலுத்துகிறோம், ஆண்டுதோறும் எப்.சி. எடுப்பதற்கு ஆட்டோவை புதுப்பிப்பது என ஆண்டுக்கு ரூ. 40,000 ஆயிரம் வரை செலவு செய்து இந்த தொழிலை செய்து வருகிறார்கள், தற்பொழுது பெட்ரோலின் விலை 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென பெட்ரோல், டீசலுக்கு இன்று முதல் 2 ரூபாய் உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் ஆட்டோவை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வார்கள். இதனால், இத்தொழிலை நம்பி உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

ஆட்டோ ஆப் உருவாக்குவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்து, நேற்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றனர். ஆனால், அதையும் அரசு செயல்படுத்தவில்லை. ஆட்டோ தொழிலை முடக்கி சமாதி கட்டி மலர்வளையம் வைக்கும் வேலையை அரசு செய்வதை உணர்த்தும் வகையில் ஆட்டோக்களுக்கு மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்தினோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து