முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சாலை மேம்பாட்டிற்கு மத்திய அரசு ரூ.87 கோடி ஒதுக்கீடு நிதின் கட்கரி தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      இந்தியா
nithin 2025-01-03

Source: provided

சென்னை: தமிழகத்தில் சாலை மேம்படுத்த ரூ.87 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை- முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த 6.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154 அகலப்படுத்த 18.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்துார் - பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த 20.52 கோடி ரூபாயும், திண்டுக்கல் மாவட்டத்தில் தருமத்துப்பட்டி -ஆடலுார் - தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த 5.8 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் மூலம் உள்ளூரில் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும்; சமூக, பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து