முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னரின் சூழ்ச்சி வலைக்குள் த.வெ.க. தலைவர் விஜய் சிக்க கூடாது : விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

சென்னை : கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வரக்கூடியவர். அந்த சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று வி.சி.க. அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

விடுதைல சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்ததை வைத்து அவருக்கு வலிய வாழ்த்துச் சொல்லி அரசியல் செய்கிறார் அண்ணாமலை. ஏற்கனவே, தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட சாட்டையடியால், ஏற்பட்ட விமர்சனங்களால் சற்று சுருண்டு போய் கிடந்த அண்ணாமலை அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு வருவதற்காக விஜய் கவர்னர் சந்தித்ததை வலிய சென்று வரவேற்று இருக்கின்றார்.

நடிகர் விஜய் திராவிட மாடல் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்ததால், அவரால் திமுகவிற்கு கோரிக்கை வைக்க முடியவில்லை. ஆகவே ,அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த துயரத்தை முன்னிட்டு கவர்னரை சந்தித்து முறையிட்டிருக்கிறார் . இது அவரது அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வரக்கூடியவர். அந்த சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்கிக் கொள்ளக் கூடாது. பா.ஜ.க. சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் பேராசை. அதனால் தான் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றார். மாணவிக்கு நீதிகேட்டு போன விஜய் மகுடிக்கு மயங்க மாட்டார் என நம்புவோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து