முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. பெண் அமைச்சர், எம்.பி. குரல் கொடுக்காதது ஏன்? அண்ணா பல்கலை. மாணவி சம்பவத்தில் குஷ்பு கேள்வி?

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      தமிழகம்
kusboo 2023-07-20

Source: provided

சென்னை: அண்ணா பல்கலை சம்பவத்தில் தி.மு.க.,வில் இருந்து யாரும் குரல் கொடுக்காதது ஏன்? என்று பா.ஜ., நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:- பாலியல் வன்கொடுமையை அரசியலாக்காதீர்கள். எந்த மாநிலத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அது பாதிப்பு தான். பெண்கள் பாதிக்கப்பட்டால் கட்சி ரீதியாக சாயம் பூசாதீர்கள். பெண்களை பந்து போல் பயன்படுத்தாதீர்கள். அண்ணா பல்கலை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்களை வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்த போது, தமிழகத்தில் இருந்து வரும் புகார்கள் கேவலமாக இருந்தன. பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை கட்சி ரீதியாகவோ குற்றம்சாட்டுவதோ, பிற மாநிலத்தோடு ஒப்பிடுவதோ கூடாது. ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளுக்கு போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கும் போது, எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்காதது ஏன்? சவுமியாவை கைது செய்தது ஏன்?

அண்ணா பல்கலை சம்பவத்தில் தி.மு.க.,வில் இருந்து யாரும் குரல் கொடுக்காதது ஏன்? கனிமொழி எங்கே? தி.மு.க., மகளிர் அணி எங்கே போனது? பா.ஜ., சார்பில் இன்று பேரணி செல்கிறோம், கைது செய்தாலும் பரவாயில்லை. தி.மு.க., சார்பில் ஒரு பெண் அமைச்சர், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., ஏன் குரல் கொடுக்கவில்லை. மாநில மகளிர் ஆணையம் ஏதாவது அறிக்கை விட்டாங்களா? ஏதாவது நடவடிக்கை எடுப்பதா சொன்னாங்களா? தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு தமிழகம் வந்த போது, தமிழக மகளிர் ஆணையத்தின் சார்பில் யாரும் உடன் செல்லாதது ஏன்? தமிழக ஆளும் கட்சி என்ன சொல்கிறார்களோ, அதைத் தான் செய்வோம் என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து