முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர், ஓடிசா மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர்கள் பதவியேற்பு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      இந்தியா
manipur 2025-01-03

Source: provided

புதுடெல்லி: மணிப்பூர் கவர்னராக அஜய் குமார் பல்லாவும், ஒடிசா கவர்னராக ஹரி பாபு கம்பம்பட்டியும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிப்பூரின் 19-வது கவர்னர்ராக முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா பதவியேற்றார். அவருக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பை அடுத்து, மணிப்பூர் ரைபிள்ஸ் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் அஜய் குமார் பல்லா ஏற்றுக்கொண்டார்.

நீண்ட காலம் மத்திய உள்துறை செயலாளராக இருந்தவர் அரிய பெருமையைப் பெற்ற அஜய் குமார் பல்லா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தார். அசாம் - மேகாலயா கேடரின் 1984-பேட்ச் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவரை, ஜனாதிபதி திரெளபதி முர்மு கடந்த மாதம் மணிப்பூர் கவர்னர்ராக நியமித்தார்.

அசாம் கவர்னர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, மணிப்பூர் கவர்னர்ராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில், அம்மாநிலத்தின் கவர்னர்ராக அஜய் குமார் பல்லா பொறுப்பேற்றார். நேற்று முன்தினம் இம்பாலுக்கு வந்த அஜய் குமார் பல்லாவுக்கு, ராஜ்பவனில் முதல்வர் என்.பைரன் சிங்கால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேபோல் புவனேஸ்வரில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்ற விழாவில், ஒடிசாவின் 27-வது கவர்னர்ராக ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்றார். முதல்வர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாஜக தலைவர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஹரி பாபு கம்பம்பட்டிக்கு ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சக்ரதாரி சரண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஒடிசா கவர்னர்ராக இருந்த ரகுபர் தாஸ் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழா முடிந்த உடன் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. முன்னதாக, ஒடிசா வந்த ஹரி பாபு கம்பம்பட்டி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து