முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானி குழுமத்திற்கு எதிரான வழக்கு: வழக்குகளை கூட்டாக விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      உலகம்
adani 2025-01-03

Source: provided

நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிரான 3 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-24 காலகட்டத்தில் சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதானி மற்றும் அவரது உறவினர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் இரண்டு சிவில் வழக்குகள் தொடர்ந்து உள்ளது.

அதன்படி, அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கு, அதானிக்கு எதிரான சிவில் வழக்கு, குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களுக்கு எதிரான சிவில் வழக்கு என விசாரணையில் இருக்கும் இந்த மூன்று வழக்குகளையும் கூட்டாக இணைக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் நீதிமன்றம் தரப்பில், நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், ஒவ்வொரு வழக்குகளும் வெவ்வேறு காலங்களில் விசாரிக்கப்படும். முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மாவட்ட நீதிபதி நிகோலஸ் ஜி கராஃபிஸிடம் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே அவர் அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து