முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு கொண்டாட்டம்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
Yercaud 2024-08-25

Source: provided

ஏற்காடு : கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏற்காடு களைகட்டியுள்ளது. புத்தாண்டையொட்டி ஏற்காட்டில் உள்ள முக்கிய நட்சத்திர தங்கும் விடுதிகளில் இன்று இரவு சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.

இதற்காக நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பாட்டு, கும்மாளம் என அனைத்து நிகழ்ச்சிக்கும் தயாராக உள்ளன. இந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது. இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன. ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். ஏற்காட்டில் தற்போது மூடு பனியுடன், கடும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரையும் பொருட்படுத்தாமல் புத்தாண்டை கொண்டாட ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து