முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      தமிழகம்
mettur 2025-01-03

Source: provided

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து  டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் தேவை குறைந்ததால், நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக அதிகரிது வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை, ஒரே ஆண்டில் 3-வது முறையாக கடந்த 31-ம் தேதி எட்டியது. பின்னர், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்துள்ளால் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு விநாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 5,000 கன அடியாகவும், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் அணையிலிருந்து டெல்டாவுக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு நேற்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,871 கன அடியாக நீர்வரத்து, நேற்று 1,992 கன அடியாக சற்று அதிகரித்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் நீர்மடடம் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119.76 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியில் இருந்து 93.08 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து