முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      தமிழகம்
cpm 2025-01-03

Source: provided

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நேற்று (ஜனவரி 3) தொடங்கி நடைபெற்றது.

விழுப்புரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கினைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ..பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ,வாசுகி, டி.கே. ரங்கராஜன், எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம், எம் எல்ஏக்கள் நாகை மாலி, சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பேரணி தொடங்கியது.மாநில மாநாட்டையொட்டி விழுப்புரம் -சென்னை சாலையிலிருந்து மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கும் பேரணி தொடங்கியது. காட்பாடி மேம்பாலம், மருத்துவமனை வீதி, நான்குமுனை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் நகராட்சித் திடல் பகுதியை அடைந்தது.

இதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், பேபி, ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினர்.இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், மாவட்டங்களிலிருந்து கட்சியினர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து இன்று, நாளை நடைபெறும் மாநாட்டு அமர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து