முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குணமடைந்த சிறுமி டான்யாவுக்கு சொந்தமாக வீடு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
cm 2025-01-04

Source: provided

சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த ஆவடிசிறுமி டான்யாவுக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின்சொந்தமாக வீடு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதி. இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தது குறித்து செய்திகள் வெளியாகின. அதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சிறுமி டான்யாவின் வீட்டுக்கு சென்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இதில் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைகளும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து சிறுமி டானியா பள்ளி செல்லத்தொடங்கினார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமி டான்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடு வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முறையான சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து