முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
CPM 2025-01-05

Source: provided

விழுப்புரம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு ஜன. 3 ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பேபி தொடங்கி வைத்தார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர். முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று புதிய மாநிலக்குழு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுவினரும், அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலக் குழுவினர் கூடி புதிய மாநிலச் செயலரைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி மாநிலச் செயலராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மாநாட்டுத் தொகுப்புரையை மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார். அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் நிறைவுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து புதிய மாநிலச் செயலர் பெ .சண்முகம் நிறைவுரையாற்றினார். புதிய மாநில செயலாளராக தேர்வாகியுள்ள சண்முகம் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநிலச் செயலாளராக இருந்தவர். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் ஒருவர் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது. கே.பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆக உள்ளதால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து