முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

சிட்னி : சிட்னியில் நடந்த 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 'பார்டர்-கவாஸ்கர்' தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது.

157 ரன்களுக்கு... 

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இந்தியா, தொடரில் 1-2 என பின்தங்கி இருந்தது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 185, ஆஸ்திரேலியா 181 ரன் எடுத்தன. இந்திய அணி 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா (41), டிராவிஸ் ஹெட் (34*), வெப்ஸ்டர் (39*) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு, 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

மிகவும் மகிழ்ச்சி... 

இந்நிலையில் இந்த தொடரில் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், "உண்மையிலேயே இந்த தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் சரியான திட்டத்துடன் இருந்தோம். அந்த வகையில் இந்த தொடரின் முடிவில் வெற்றி பெற்றது பெருமையாக இருக்கிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டி எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை என்றாலும், ஒரு அணியாக நாங்கள் மீண்டு வந்து இந்த கோப்பையை ஜெயித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி.

இன்னும் நம்பிக்கை...

எங்களது அணியில் மூன்று வீரர்கள் இந்த தொடரில் அறிமுகமாகி மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தனர். இப்படி ஒரு அணியுடன் இணைந்து விளையாடியது உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது. இதுபோன்ற பெரிய அணிக்கு எதிராக பெற்ற வெற்றி எங்களுக்கு இன்னும் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்திய அணியும் இந்த தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்களுக்கும் இந்த தொடர் விருந்தாக அமைந்தது. ரோகித் மற்றும் ஜஸ்பிரித்துக்கு நன்றி." என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து