முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எது நடந்தாலும் இந்திய அணியின் நன்மைக்கே : தோல்விக்கு பிறகு காம்பிர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

சிட்னி : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு  உள்ள பெரிய இடைவெளியில் மாற்றங்கள் நடக்கலாம். எது நடந்தாலும் இந்திய அணியின் நன்மைக்காக இருக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் காம்பிர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

3-1 என்ற கணக்கில்...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. 

ஏமாற்றம் அளிக்கிறது...

இந்த நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரின் தோல்வி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சயாளர் கூறியதாவது:- நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை, எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் இறுதிவரை போராடினோம்.போட்டிகளை வென்றிருக்கக்கூடிய தருணங்கள் எங்களிடம் இருந்தன. 

5 மாதங்கள் உள்ளன...

மெல்போர்னில் நாங்கள் சமன் செய்ய முடிந்திருந்தால், அழுத்தம் குறைவாக இருந்திருக்கும். சிட்னியில் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் அபாரமாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். இந்திய டெஸ்ட் அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இவ்வளவு சீக்கிரம் பேசுவது சரியாக இருக்காது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய இடைவெளியில் மாற்றங்கள் நடக்கலாம். எது நடந்தாலும் இந்திய அணியின் நன்மைக்காக இருக்கும்.என தெரிவித்தார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து