முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியை வழங்கினார் அமைச்சர் பொன்முடி

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
leolakshmi 2025-01-04

Source: provided

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் பொன்முடி நேரில் வழங்கினார்.

விக்கிரவாண்டியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்த 4 வயதான குழந்தை லியா லட்சுமி, நேற்று முன்தினம் பள்ளி உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வழக்கு தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளி வளாகத்தில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து பள்ளி ஊழியர்கள், குழந்தையை மீட்டு காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகளை வெளியிட்டு சந்தேகங்களுக்கு பள்ளி நிர்வாகம் பதில் அளித்திருந்தது.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் தந்தை பழனிவேல், தனது குழந்தையின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விக்கிரவாண்டி போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பள்ளியின் தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமில்லா மேரி, உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

நேற்று காலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை லியா லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழந்தையின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்களிடம் முதல்வர் அறிவித்த பொது நிவாரண நிதி ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பொன்முடி நேரில் வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து