முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' தி.மு.க. மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
eps 2025-01-04

Source: provided

சென்னை: 'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க., அதற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் வாக்குமூலங்களே சாட்சி என்றும் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறை, தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்றால் காவல் துறை வழக்கு போடுகிறது. நான் முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன்... தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது.

தி.மு.க. ஆட்சியில் மக்கள் ஊர்வலங்கள் நடத்தக்கூடாதா? தமிழ்நாட்டிலே மக்கள் இயக்கங்கள் நடத்தக்கூடாதா? மக்கள் உரிமைக்காக போராடினால் கைது செய்வதா? ஆர்ப்பாட்டம் நடந்தால் அதை அனுமதி ரத்து செய்து கைது செய்து விட்டால் முடக்கி விட முடியுமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? என்று அவர் கூறி உள்ளார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய வீடியோவை வெளியிட்டு, ஸ்டாலின் மாடல் என்பது அதிகார அடக்குமுறைக்கான பாசிச மாடல் தான் என்பதற்கு கூட்டணி கட்சிகளின் இத்தகைய வாக்குமூலங்களே சாட்சி என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து