முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
jallikattu 2025-01-04

Source: provided

புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 600 காளைகள் பங்கேற்றன.

தமிழர்களின் வீர விளையாட்டாகவும், பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டி திகழ்கிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதிக வாடிவாசல்களை கொண்டது மட்டுமில்லாமல், ஜல்லிக்கட்டு காளைகளும், காளையர்களும் அதிகமுள்ள மாவட்டமாகவும் திகழ்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு (2025) தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சியில் நேற்று தொடங்கி நடைபெற்றது. புனித வின்னேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர். இதையடுத்து கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து