எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: திமுக ஆட்சியை பாராட்டிய கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல்?. அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டுதான், அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும் என்று தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, அவர் கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3- ஆம் தேதி நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது:- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது அதற்கு எதிராகப் போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியலாக்கும் செயலில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈடுபடுகிறார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது, அரசை எதிர்த்து போராடினாரா? அப்போது எங்கே சென்றிருந்தார் அவர்.
பாஜக- ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது” என்றார். கே.பாலகிருஷ்ணன் இத்தகையப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனின் கேள்விகள் தொடர்பாக நேற்றுபேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, “தற்போது வரை இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் கே.பாலகிருஷ்ணன். மகளிர் உரிமை திட்டம் என்றாலும் சரி, விடியல் பயணம் என்றாலும் சரி, புதுமைப்பெண் திட்டம் என்றாலும் சரி முதல்வருடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் புகழ்ந்தவர். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டுதான், அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும்.
அதேநேரம், எங்களைப் பொறுத்த அளவில் ஜனநாயகப்படி போராடுவதற்கு உரிமை கோருவோருக்கு, எங்களால் முடிந்த அளவிற்கு மறுப்பதில்லை. மக்களுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களை எடுத்துப் பார்த்தால் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடியவர்களுக்கு அனுமதி தந்தது போல் வேறு எந்த ஆட்சியிலும் அனுமதி தரப்படவில்லை.
அதேபோல எந்தவொரு கோரிக்கைக்காக போராட்டம் நடந்தாலும், உடனே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை அனுப்பி பேசி அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோடு கலந்து பேசி உடனடியாக அதற்கு நிவாரணம் காணும் அரசாகவும் இந்த அரசு இருந்து கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் என்று வருகின்ற பொழுது மக்களுடைய சராசரி வாழ்வு, தினசரி வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்பது திமுக ஆட்சியின் எண்ணம்.
மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருப்பதில்லை. அவர்கள்மீது எந்தவிதமான அடக்குமுறைகளோ பயன்படுத்தப்படுவதில்லை. முறையாக வழக்கு பதிந்து அவர்களை மாலைக்குள்ளாக விடுதலை செய்கிறது காவல்துறை. இது சட்டத்தின் ஆட்சி.
பாலகிருஷ்ணன் இந்த ஆட்சியை புகழ்ந்து கொண்டிருந்தவர். வருங்காலங்களில் அவர் புகழ்கின்ற அளவிற்கு அவருடைய தேவைகளை நிச்சயமாக செவிசாய்த்து இந்த ஆட்சி நிறைவேற்றும். எல்லோருக்கும் எல்லாம் என்று கூறும் முதல்வர், நிச்சயமாக இப்பிரச்னையையும் களைவார். மற்றபடி குற்றம்சாட்ட வேண்டும் என்றே குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
05 Jan 2025சென்னை : தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு
05 Jan 2025விழுப்புரம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் ஊக்கத்தொகை வழங்க சீமான் வலியுறுத்தல்
05 Jan 2025சென்னை : பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
-
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
05 Jan 2025சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் நலத்திட்டங்களை நிறுத்த மாட்டோம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
05 Jan 2025புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படமாட்டாது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி
05 Jan 2025சிட்னி : சிட்னியில் நடந்த 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
-
அதிக சாதகமான பிட்ச்சில் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது: பும்ரா
05 Jan 2025சிட்னி : பந்துவீச அதிக சாதகமான பிட்ச்சில் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
-
எது நடந்தாலும் இந்திய அணியின் நன்மைக்கே : தோல்விக்கு பிறகு காம்பிர் பேட்டி
05 Jan 2025சிட்னி : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு உள்ள பெரிய இடைவெளியில் மாற்றங்கள் நடக்கலாம்.
-
அரினா சபலென்கா சாம்பியன்
05 Jan 2025பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
05 Jan 2025சிட்னி : சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-01-2025.
06 Jan 2025 -
சிட்னி டெஸ்டின் 3-வது நாளில் இந்திய அணி பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடியது ஏன்?
05 Jan 2025சிட்னி : சிட்னி டெஸ்டின் 3-வது நாளில் இந்திய அணி பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடியதன் காரணம் தற்போது தெரியவந்துள்ளது
-
கண்நீரா இசை வெளியீட்டு விழா
06 Jan 2025உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் " கண்நீரா ".
-
ஷாம் நடிப்பில் பிப் 21-ல் வெளியாகும் அஸ்திரம்
06 Jan 2025பெஸ்ட் மூவிஸ் சார்பில் தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.
-
ADD-ONE தயாரிப்பில் இணையும் சிவராஜ்குமார்
06 Jan 2025சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது மாஸ் நடிப்பைக் காட்டிய சிவராஜ்குமார் பின்னர், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தா
-
தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு
06 Jan 2025இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் நாகசைதன்யா சாய்பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
20 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி-2
06 Jan 20252004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' .
-
கவர்னர் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
06 Jan 2025சென்னை: பேரவையில் இருந்து கவர்னர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
படப்பிடிப்பு நிறைவு பெற்ற டூரிஸ்ட் பேமிலி
06 Jan 2025அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'டூரிஸ்ட் பேமிலி' .
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
06 Jan 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியாக குறைந்துள்ளது.
-
தமிழக சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்? சபாநாயகர் அப்பாவு தகவல்
06 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்
06 Jan 2025சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்ற நிலையில்அதுகுறித்து கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
-
28 மாவட்டங்களில் பதவி காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் தமிழ்நாடு அரசு உத்தரவு
06 Jan 2025சென்னை: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பதவிக்காலம் முடிவடைந்த ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவில் பரவியது எச்.எம்.பி.வி. வைரஸ்: 3 குழந்தைகளுக்கு தொற்றை உறுதி செய்தது மத்திய அரசு
06 Jan 2025புதுடெல்லி: சீனாவை அடுத்து தற்போது இந்தியாவில் பரவியுள்ளது எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு.
-
ஞானசேகரின் சொத்து தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ்
06 Jan 2025சென்னை: ஞானசேகரின் சொத்துக்கள் குறித்து ஆவணங்கள் கேட்டு சென்னை மாநகராட்சி மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.