முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்பிற்கான தண்டனை அடுத்த வாரம் அறிவிப்பு

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      உலகம்
trump 2025-01-04

Source: provided

வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பிற்கான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொன்லாடு டிரம்ப். இவர்  2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றினார். அதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் வரும் 20-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.்

இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல்ஸ். இவர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். 2006-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக ஸ்டோமி டெனியல்ஸ் குற்றம் சாட்டினார். மேலும், 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தன்னுடனான பாலியல் உறவு விவகாரத்தை வெளியே கூறிவிடக்கூடாது என்பதற்காக டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டெனியல்ஸ் தெரிவித்தார்.

அதேவேளை, தேர்தல் பிரசாரத்திற்கு திரட்டப்பட்ட நிதியில் இருந்து டொனால்டு டிரம்ப் போலி வணிக பதிவுகளை உருவாக்கி 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பணத்தை ஸ்டோமி டெனியல்சுக்கு கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் டொனால்டு டிரம்பிற்கு எதிராக பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்ஹாட்டன் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு அடுத்த வாரம் கோர்ட்டு தண்டனை அறிவிக்கிறது. அடுத்த வாரம் 10-ம் தேதி கோர்ட்டு தண்டனை அறிவிக்கப்படுகிறது. தண்டனை அறிவிப்பின்போது டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் நேரிலோ, காணொளி காட்சி மூலமாகவோ ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு சிறை தண்டனை விதிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டு டிரம்ப் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 20-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அவர் மீதான வழக்கில் 10-ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் நிகழ்வு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து