முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      இந்தியா
bjp 2025-01-04

Source: provided

டெல்லி: டெல்லியில் முதல்வர் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி உருவாகி உள்ள நிலையில் இந்த தேர்தல் கடும் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மியும், கைப்பற்றும் முயற்சியில் பா.ஜ.க.வும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து முன்னாள் மக்களவை எம்.பி. பர்வேஷ் வர்மாவை பா.ஜ.க. நிறுத்தியுள்ளது. புது டெல்லி தொகுதியில் கடந்த 2013 முதல் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கெஜ்ரிவாலுக்கு பர்வேஷ் வர்மா இந்த முறை கடும் போட்டியை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க. மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து கல்காஜியில் போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா போட்டியிடுகிறார்.

மேலும் ஆம் ஆத்மியில் இருந்து பிரிந்து வந்து பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜ் குமார் ஆனந்த் மற்றும் கைலாஷ் கெலாட் ஆகியோருக்கும் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பிஜ்வாசான் தொகுதியில் கைலாஷ் கெலாட் மற்றும் படேல் நகர் தொகுதியில் ராஜ் குமார் ஆனந்த் நிற்கின்றனர் . மேலும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்குத் தாவிய கர்தார் சிங் தன்வார் தான் எம்.எல்.ஏ. ஆக வென்ற சத்தர்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

எம்.எல்.ஏ. அணில் பாஜ்பயை கழற்றிவிட்டு காந்தி நகர் தொகுதியை தங்களுடன் இணைந்த டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லிக்கு ஒதுக்கியுள்ளது. 2003 முதல் 2013 வரை டெல்லியில் ஷீலா தீட்சித்தின் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த லவ்லி, கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து