முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே மாதிரி 8 முறை கோலி அவுட்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

முன்னதாக இந்த இன்னிங்சில் விராட் கோலி 6 ரன்னில் போல்ண்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதுவும் அவுட் சைடு ஆப் ஸ்டம்புக்கு சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவுட் சைடு அப் ஸ்டம்ப் பந்தை சீண்டி இந்த தொடரில் மட்டும் 8-வது முறையாக அவுட் ஆகி உள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 10 இன்னிங்சுகளில் 8 முறை இந்த மாதிரி அவுட் ஆகியுள்ளார். மற்ற 2 இன்னிங்களில் ஒன்றில் நாட் அவுட். மற்றொன்றில் பேட்டிங் செய்யவில்லை. முதல் டெஸ்ட்டில் 2-வது இன்னிங்சில் 100 நாட் அவுட்டில் இருந்தார். 

அவர் சதம் அடித்தவுடன் இந்தியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 3-வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. அதனால் விராட் கோலி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறினார். ஆனால் அதையெல்லாம் அவர் யோசிப்பாரா இல்லையா என்பது தெரியவில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சச்சின் வீடியோவை மீண்டும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

______________________________________________________________________________

ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - ராகுல் களமிறங்கினர். 

இந்த நிலையில், அதிரடியாக விளையாடி  அரைசதம் அடித்த ரிஷப் பண்டுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,  பெரும்பாலான பேட்ஸ்மேன்கள்  ஸ்டிரைக் ரேட் 50 அல்லது அதற்கும் குறைவாக பேட் செய்த ஆடுகளத்தில் , ரிஷப் பண்ட் 184 ஸ்டிரைக் ரேட் உடன் ஆடியது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று . அவர் முதல் பந்தில் இருந்து ஆஸ்திரேலியாவைத் திணறடித்தார். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது எப்போதும் சிறப்பாக இருக்கிறது. என்ன ஒரு அபாரமான இன்னிங்ஸ். என தெரிவித்துள்ளார் .

_____________________________________________________________

இறுதிப் போட்டியில் ஜிரி லெகேக்கா

ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. நேற்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான டிமித்ரோவ், செக்குடியரசின் தரநிலை பெறாத ஜிரி லெகேக்காவை எதிர்கொண்டார். நடப்பு சாம்பியனுக்கு எதிராக லெகாக்கா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிமிட்ரோவால் லெகாக்கா ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 

இதனால் முதல் செட்டை 4-6 என அதிர்ச்சிகரமாக இழந்தார். 2-வது செட்டில் நம்பிக்கையுடன் விளையாடினார். 2-வது செட்டில் 4-4 என சமநிலையில் இருக்கும்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செக்குடியரசு வீரர் ஜிரி லெகேக்கா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். முதல்நிலை வீரரான ஜோகோவிச் நேற்று நடைபெற்ற காலிறுதியில் அமெரிக்காவின் ஓபெல்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் குடெர்மெட்டோவா கலினினாவை 6-4, 6-3 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து