முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த 2 ஆண்டுகளை தொடர்ந்து தற்போதும் சர்ச்சையில் கவர்னர்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      தமிழகம்
RN Ravi 2023-04-06

Source: provided

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என். ரவி 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுளை தொடர்ந்து தற்போதும் இந்நிகழ்வு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று காலை 9 மணியளவில் தொடங்கியது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர். கூட்டத்தொடரை முன்னிட்டு, சபாநாயகர் அப்பாவு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில், ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக சட்டசபை கூடியது. சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து, சால்வை போர்த்தி வரவேற்றார். எனினும், தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என். ரவி 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறினார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

கவர்னர் அவையில் இருந்து பாதியில் வெளியேறுவது என்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக சட்டசபையில் கவர்னர் தொடர்பான சர்ச்சைகள் கடந்த காலங்களிலும் எழுந்துள்ளன. 2023-ம் ஆண்டில், தமிழக அரசின் அறிக்கையில் இருந்த பெரியார், அண்ணா ஆகியோரின் பெயர்களை கவர்னர் படிக்காமல் தவிர்த்து விட்டார். இதன்பின்னர், 2024-ம் ஆண்டில் கவர்னர் ரவி, உரையை முழுமையாக படிக்காமல் சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவையில் இருந்து கவர்னர் ரவி நேற்று வெளியேறி உள்ளார். இதுபற்றி கவர்னர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயர்கள் டேக் செய்யப்பட்டு உள்ளன. முதலில் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை டேக் செய்து கவர்னர் மாளிகை சார்பில் மீண்டும் பதிவு வெளியிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து