முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னி டெஸ்ட் 2-ம் இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டும் தடுமாற்றம்: 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

சிட்னி : சிட்னி டெஸ்ட்டின் 2-ம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. 

181க்கு ஆல் அவுட்...

பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185க்கு ஆல் அவுட்டாக ஆஸி. 181க்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் 32 ஓவர்கள் விளையாடி 141/6 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் கூடுதலாக இருந்ததால் இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. ஆஸி. அணி 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றால் 2-2 என தொடர் சமநிலையில் முடியும். பிஜிடி தொடரும் இந்தியாவின் வசம் தக்கவைக்கப்படும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கிறது. இதில் தோல்வியுற்றால் அனைத்துமே இந்திய அணி இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

3-வது நாள் ஆட்டம்... 

ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். 

ஜெய்ஸ்வால் சாதனை...

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சின் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். ஒருநாள் (16) மற்றும் டி20 (18) போட்டியில் தொடக்க ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சேவாக் உள்ளார். டெஸ்ட்டில் ஒட்டுமொத்தமாக 4-வது இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்கள் முறையே மைக்கேல் ஸ்லேட்டர் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஓஷத பெர்னாண்டோ (இலங்கை) ஆகியோர் தொடக்க ஓவரில் 16 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து