முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர் : அரசிதழில் வெளியிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
CM 2024-12-10

Source: provided

சென்னை : தமிழகத்தில் விழுப்புரம், கடலூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மிக கனமழை...

ஃபெஞ்சல் புயலானது கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் புதுச்சேரிக்கு அருகில் முற்றிலுமாக் கரையைக் கடந்தது. அப்போது சூறாவளி புயலாக மணிக்கு 70-80 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 90 கிமீ வேகத்திலும் காற்று வீசியது.  இதனால் புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்  மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர்,  திருப்பத்தூர்,  கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்தது. 

கடும் பாதிப்பு...

இதனால் பெரும் பகுதிகள் கனமழையாலும், சூறாவளிக்காற்றாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. மேலும், விவசாய நிலங்கள், பல வீடுகள்  , பாலங்கள் சேதங்களுக்கு உள்ளாகியதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து, உடனடியாக நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.2,000 வழங்க தமிழ்நாடு அரசு தெரிவித்தது. உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரண நிதியாக சுமார் ரூ. 7,000 கோடி கேட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

தீவிர பேரிடராக...

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தை, தீவிரமான இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல், மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிக்காக பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இதனால் சீரமைப்பு பணிகளை மேலும் வேகமாக செயல்படுத்த முடியும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து