முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸை சேர்ந்த கே.வி.தங்கபாலுவுக்கு பெருந்தலைவர் காமராசர் விருதை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.வி. தங்கபாலுவுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது இதுவரை 18 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வரிசையில் 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும், மத்திய இணை அமைச்சராகவும், ஒரு முறை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை பாராளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ. 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார். இவ்விருது தமிழ்நாடு முதல்வரால் திருவள்ளுவர் திருநாளான  15-ம் தேதி அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து