முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளியில் குழந்தை உயிரிழந்த விவகாரம்: தாளாளர் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
Pudukottai 2023 07 01

Source: provided

விழுப்புரம் : தனியார் பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது. இயற்கை உபாதையை கழிக்க கழிவறைக்குச் சென்றிருந்தபோது, குழந்தை கழிவறைத் தொட்டி மூடி உடைந்து உள்ளே விழுந்துள்ளது. குழந்தை மீட்கப்பட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அஜாக்கிரதையாக செயல்பட்ட பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை நேற்று (ஜன. 8) விசாரித்த நீதிபதி மணிமொழி, மூவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து