முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் என்ன? பாராளுமன்ற கூட்டுக்குழு முதல் கூட்டத்தில் அதிகாரிகள் விளக்கம்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      இந்தியா
One-Nation- -One-Election

Source: provided

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர்.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 மசோதாக்களை அண்மையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், அவற்றை பாராளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாஜக மக்களவை உறுப்பினர் பி.பி. செளதரி தலைமையில் 39 பேர் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் 27 மக்களவை எம்.பி.க்கள், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று காலை கூடியது. கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி. செளதரி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மசோதாக்களில் இடம்பெற்றுள்ள விவரம் குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகள் குழுவிடம் விளக்கமளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து