முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூரு - சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
Train-2023-05-01

Source: provided

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு- தூத்துக்குடி, பெங்களூரு - சென்னை, எர்ணாகுளம் - சென்னைக்கு இரு வழித்தடங்களிலும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி வருகிற 10-ம் தேதி சிறப்பு ரெயில்(07319) பெங்களூ ருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 க்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடையும். அன்றைய தினம் சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் ரெயில்(07320) இரவு 10.50-க்கு பெங்களூருவை சென்றடையும்.

10-ம் தேதி சிறப்பு ரெயில்(06569) பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள்  11-ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும். 16-ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15 -க்கு புறப்படும் ரெயில் (06046) மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8.30 க்கு சென்னையை அடையும்.

மறுமார்க்கமாக 17-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில்(06047) இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். 15-ம் தேதி( புதன்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து காலை 4.25 -க்கு புறப்படும் ரெயில் (06058) அன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக  16-ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில்(06047) இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து