முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் நடந்த விபரீதம்: 10 பேர் ரயில் மோதி பலி

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

 மும்பை : மஹாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியால், தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில், 10 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர்   படுகாயமடைந்துள்ளதால்  பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து உ.பி.,யின் லக்னோவுக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. மஹாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியை கடந்த போது, ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து 30 முதல் பயணிகள் உயிர் பயத்தில் ரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அப்போது, மறுபுறத்தில் டில்லியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் இவர்கள் மீது மோதியது. இவ்விபத்தில் 10 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர்  விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்தில் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து அறிந்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதாக தெரிவித்து உள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து