முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபத்தான அணி இந்தியா: டிம் சவுதி கருத்து

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

வெலிங்டன் : ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா மிகவும் ஆபத்தான அணி  என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சவுதி தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை... 

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. 19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 2017-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இது என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆபத்தான அணி... 

இந்நிலையில் ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா மிகவும் ஆபத்தான அணி என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சவுதி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஐ.சி.சி. தொடர்கள் என்று வரும்போது இந்தியா வலுவான அணி. அவர்கள் எப்போதும் நாக் அவுட் சுற்றை நெருங்கி விடுவார்கள். எனவே அவர்கள் தொடர் முழுவதுமே ஆபத்தான அணியாக இருப்பார்கள். 

நியூசிலாந்துக்கு வாய்ப்பு...

அதே போல நியூசிலாந்து அணியும் இருக்கும் என்று நம்புகிறேன். 8 அணிகள் பங்கேற்கும் இது மிகவும் சிறந்த தொடர். நானும் அதில் எனது கெரியரில் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். எனவே நியூசிலாந்து இத்தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை சேர்க்கும் என்று நம்புகிறேன். உலகத்தொடர்களில் அணியாக முக்கிய நேரத்தில் சிறப்பாக விளையாடும் திறன் எங்களிடம் இருக்கிறது. ஒன்றாக விளையாடுவது என்பது நாங்கள் அனைவரும் சேர்ந்து வளர்த்துக் கொண்ட ஒரு திறமையாகும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து