முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னை மரங்கள் அழிவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2025      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை : தென்னை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மனிதர்களுக்கு பல வகைகளில் பயன்படக்கூடிய மரங்களில் ஒன்றாக தென்னை மரம் விளங்குகிறது.  தமிழ்நாட்டில், குறிப்பாக பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு. ஆனைமலை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளருகின்றன.  கடந்த சில மாதங்களாக, ரூ கோஸ், சுருள் வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு உள்ளிட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி,  பல்வேறு நோய்கள் ஏற்பட்டு தென்னை மரங்கள் அழிந்து கொண்டு வருகின்றன. இது தவிர, வறட்சி காரணமாக அழிந்து வரும் தென்னை மரங்களும் ஏராளம்.

தற்போது, பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதன் காரணமாக, காய்ப்புத் திறன் வெகுவாக குறைந்துவிட்டது என்றும், பூச்சித் தாக்குதல் காரணமாக தென்னை மரங்களை வெட்ட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் தேங்காய் மட்டையில் இருந்து நாரை பிரிக்கும்போது கிடைக்கும் தேங்காய் மஞ்சை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு வந்துவிடும் என்றும், இதன்மூலம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்க நேரிடும் என்றும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்றும் தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேளாண் வல்லுநர்கள், தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினைத் தரக்கூடிய, அந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. எனவே, மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, தென்னை மரங்கள் அழிவதை தடுத்து நிறுத்தி, தென்னை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து