முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு மீண்டும் கை விலங்கிடப்பட்டதாக சர்ச்சை

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2025      இந்தியா
Us

Source: provided

அமிர்தசரஸ் : அமெரிக்காவில் இருந்து 2-வது முறையாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கும், கால்களில் சங்கிலியும் பிணைக்கப்பட்டு இருந்தன என மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பின்னர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவின் எல்லை வழியே சட்டவிரோத வகையில், அந்நாட்டுக்குள் பலர் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.

இதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளாக இருந்த 104 இந்தியர்கள் கடந்த வாரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, அவர்களின் கைகளில் விலங்கு போட்டும் மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் இருந்தன என குற்றச்சாட்டு எழுந்தது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 116 இந்தியர்கள் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் வந்த விமானம், நள்ளிரவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதில் பஞ்சாப்பை சேர்ந்த 65 பேர், அரியானாவை சேர்ந்த 33 பேர் அடங்குவர். 8 பேர் குஜராத் மாநிலத்தவர் ஆவர். கோவா, உத்தர பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா 2 பேர், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் இமாசல பிரதேச மாநிலத்தில் இருந்து தலா ஒருவரும் இதில் அடங்குவர்.

அவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டனர் என மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி அமிர்தசரஸ் நகருக்கு வந்தடைந்த தல்ஜீத் சிங் என்பவர் நேற்று  நிருபர்களிடம் கூறும்போது, விமான பயணத்தின்போது இந்தியர்களின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தன. கைவிலங்கும் போடப்பட்டு இருந்தன என கூறியுள்ளார்.

பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் குராலா கான் கிராமத்தில் வசித்து வருபவரான சிங், புலம்பெயர்வோர் பயன்படுத்தும் சட்டவிரோத வழியில் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். டிராவல் ஏஜென்ட் ஒருவர் தன்னை தவறாக வழிநடத்தி விட்டார் என சிங் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் நேற்று காலை 4.30 மணியளவில் அவரவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து