முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிக்கிறீர்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2025      இந்தியா
Jaishankar 2023 06 08

Source: provided

முனிச் : ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம் என மத்திய மந்திரி ஜெய்சங்கர்  தெரிவித்தார். 

ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த 14-ந்தேதி பாதுகாப்பு மாநாடு தொடங்கியது. இதில், ஆசிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.  இதில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், அமெரிக்க செனட் உறுப்பினர் எலிஸ்ஸா ஸ்லாட்கின், வார்சா மேயர் ரபால் ஜாஸ்கோவ்ஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில், ஜனநாயக மீள்தன்மையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் பேசிய, மத்திய அமைச்சர்  ஜெய்சங்கர், ஜனநாயகம் ஒரு மேற்கத்திய பண்புநலன் என கூறிக்கொண்டு செயல்பட்டு வந்த மேற்கத்திய நாடுகள், மறுபுறம் உலகளாவிய தெற்கு பகுதியில் ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிப்பதில் முனைப்புடன் செயல்பட்டது. அது இன்னும் நடக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த நாட்டில் மதிக்க கூடிய விசயங்கள் எல்லாவற்றையும், வெளிநாட்டில் கடைப்பிடிப்பதில்லை .

ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம். அதன்பின்னர் பிற நாடுகளின் வெற்றிகள், குறைபாடுகள் மற்றும் பொறுப்பு தன்மையை உலகளாவிய தெற்கு நாடுகளும் காணும் என்றார்.

தொடர்ந்து அவர், நாங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து சவால்களும், அதுவும் குறைந்த வருவாய் ஈட்டும்போதும், ஜனநாயக மாதிரிக்கு உண்மையாக நாங்கள் இருக்கிறோம். ஏறக்குறைய எங்களுடைய உலகை நீங்கள் பார்க்கும்போதே அது தெரியும். அதனை செய்து வரும் மிக அழகான ஒரே நாடாக நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் இந்தியா பெருமை கொள்ளும் வகையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து